ஜோதிட அனுபவம்
எனக்கு தெரிந்த ஒருவர்
இருக்கிறார். இவருக்கு அயல்நாட்டில் வேலை செய்யவேண்டும் என்று ஆசை. இவரின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில்
உள்ளது அந்த மாவட்டத்தில் பெரும்பாலோர் அயல்நாடுகளில் வேலை செய்பவர்கள். அதனால் இவரும் சிங்கபூர் சென்றார்.
இவர் சென்றது சுற்றுலா விசாவில் சென்று அங்கேயே நீண்ட நாட்களாக தங்கிவிட்டார். பிறகு ஒரு நாள் அங்கு காவல்துறையில் மாட்டிக்கொண்டார்.
அங்கு தண்டனை பெற்று இந்தியா வந்துவிட்டார். வந்தவர் இங்கு 4 மாதங்கள் இருந்தார்.
அயல்நாட்டு ஆசை விடவில்லை மீண்டும் சிங்கபூர் செல்ல முடிவு எடுத்து மறுபடியும் சுற்றுலா விசாவில் செல்வது என்று முடிவு எடுத்து சென்றார்.
ஏன் என்றால் ஒருமுறை சிங்கபூரில் தவறாக தங்கினால் மீண்டும் அந்த நாட்டிற்க்கு செல்லமுடியாது என்று சட்டம் அதனால் இவர் சுற்றுலா விசாவில் மீண்டும்
செல்வது என்று முடிவு எடுத்தார். அதன்படி சென்று குறுகிய காலத்தில் திரும்பி வருவார். இந்த முறைப்படி அவர் நான்கு முறை சென்று வந்துள்ளார். இவர் 5 வது முறையாக செல்லும் போது விமான நிலையத்தில் மாட்டிக்கொண்டார். இவரை அந்த நாட்டு விமான
நிலைய அதிகாரிகள் இந்தியாவிற்க்கு திருப்பி
அனுப்பினார்கள். இவர் இப்பொழுது இந்தியாவில் இருக்கிறார்.
இவருக்கு அயல்நாட்டின் மீது ஆசை ஏற்பட்டது எதற்க்காக?
அயல்நாட்டின் இவர் இருக்கும்போது இவர் அங்கு காவல்துறையில் மாட்டிக்கொண்டது
எப்படி ?
இப்பொழுது நாம் ஜாதக ரீதியாக என்ன காரணம் என்று பார்க்கலாம்.
No comments:
Post a Comment